நியூசிலாந்தின் இஸ்லாமிய சங்கங்களின் கூட்டமைப்பு (FIANZ) போரால் பாதிக்கப்பட்ட காஸா மக்களுக்கு உணவுப் பொருட்களை அனுப்பிவைத்துள்ளதாக அந்த அமைப்பு உறுதி செய்துள்ளது.
காசாவில் கிட்டத்தட்ட 200 கூடாரங்கள் மற்றும் 2000 குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்ள ஒரு முகாமுக்கு இந்த உணவுப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளதாக FIANZ மனிதாபிமான உதவி அமைப்பின் முக்தார் அலி போயா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆதரவளிக்க FIANZ இன் தன்னார்வத் தொண்டர்கள் குழு எகிப்துக்குப் பயணம் செய்து வருவதாகவும், உணவு, மருத்துவம் மற்றும் சுகாதாரப் பொருட்களில் "சிறிய பங்களிப்பைச் செய்ய" நம்புவதாகவும் அந்த அமைப்பு கூறியது.
செய்தி நிருபர் - புகழ்