மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய ‘ஆடு ஜீவிதம்’ நாவலை அடிப்படையாக கொண்டு ‘ஆடு ஜீவிதம்’ படம் உருவாகியுள்ளது. படத்தை ப்ளஸ்ஸி இயக்க, பிருத்விராஜ், அமலா பால் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சுனில் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பான் இந்தியா முறையில் வெளியான இப்படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.80 கோடி என கூறப்படுகிறது. இந்நிலையில் படம் நேற்று (மார்ச் 28) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
முதல் நாளில் படம் இந்திய அளவில் ரூ.8.50 கோடியையும், வெளிநாடுகளில் ரூ.6.50 கோடியையும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் உலகம் முழுவதும் ரூ.15 கோடியை வசூலித்துள்ளது. கேரளாவில் மட்டும் படம் ரூ.6.30 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. தமிழகத்தில் 60 - 90 லட்சம் ரூபாய் வரை வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரளாவில் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. காரணம் அந்த மண்ணிலிருந்து வளைகுடா நாட்டுக்குச் சென்று திரும்பிய ஒருவரின் கதை என்பதால் அம்மக்களால் எளிதில் கனெக்ட் செய்துகொள்ள முடிகிறது.
கேரளாவின் 400 திரைகளில் இப்படம் வெளியாகியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை நேற்றுடன் ஒப்பிடும்போது இன்று முன்பதிவு கூடியுள்ளது. வார விடுமுறை நாட்களில் கூடுதல் புக்கிங் இருக்கும் தெரிகிறது.