இலங்கை

இலங்கையில் இந்த வருடம் ஜனவரி மாதத்தில் பல்வேறு மரக்கறிகளை இறக்குமதி செய்வதற்கு 33 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  பருப்பு, வெங்காயம், உருளைக்கிழங்கு, பருப்பு வகைகள் மற்றும்  மரக்கறிகளை இறக்குமதி செய்வதற்கு பெருமளவு பணம் செலவிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு (2023) டிசம்பரில் காய்கறிகளை இறக்குமதி செய்ய இருபது மில்லியன் டொலர்கள்  செலவிடப்பட்டது. இவ்வாண்டு ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய இரு மாதங்களில் மரக்கறிகளை இறக்குமதி செய்வதற்கு 62.8 மில்லியன் டொலர்களும், கடந்த வருடம் (2023) இதே இரண்டு மாதங்களில் 44.1 மில்லியன் டொலர்கள் மரக்கறி இறக்குமதிக்காக செலவிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த ஆண்டு ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களுக்கு இடையில் 68 மில்லியன் டொலர் பெறுமதியான காய்கறிகள் மற்றும் பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.