Aoraki Mount Cook அருகே நடந்த தீவிர விபத்தில் 5 பேர் காயமடைந்துள்ள நிலையில் அவர்களில் பலத்த காயமடைந்த மூவர் Christchurch மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டனர்.
இன்று பிற்பகல் Aoraki திருப்பத்தில் இருந்து Braemer சாலைக்கு செல்லும் மாநில நெடுஞ்சாலை 8 இல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் மிதமான காயமடைந்த இருவர் சாலை வழியாக Timaru மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
நெடுஞ்சாலை பல மணி நேரம் மூடப்பட வாய்ப்புள்ளதாகவும், வாகன ஓட்டுநர்கள் அப்பகுதியை தவிர்க்க வேண்டும் என்றும் போக்குவரத்து நிறுவனம் தெரிவித்துள்ளது.
செய்தி நிருபர் - புகழ்