தென்கிழக்கு ஆக்லாந்தின் தொலைதூரப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயை அணைக்க பல தீயணைப்பு வாகனங்களும் இரண்டு ஹெலிகாப்டர்களும் போராடி வருகின்றன.

Kawakawa Bay இல் மதியம் 1 மணிக்குப் பிறகு இந்த காட்டுத் தீ ஏற்பட்டதாக தீயணைப்பு மற்றும் அவசரநிலை நியூசிலாந்து தெரிவித்துள்ளது.

குறித்த தீ 600 மீட்டர் அளவுக்கு தீபரவியதாக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

6 தீயணைப்பு வாகனங்கள், இரண்டு ஹெலிகாப்டர்கள் மற்றும் மூன்று தண்ணீர் டேங்கர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளன.

இந்த நிலையில் எந்த சொத்துக்களுக்கும் ஆபத்து இல்லை என்றும், காவல்துறையும் தீயை அணைக்க உதவுவதாக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

செய்தி நிருபர் - புகழ்