கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் பிரபலங்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும் விஜயகாந்தின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தி உள்ளார் கவுண்டமணி.

80களில் சினிமாவில் ஏகப்பட்ட கிராமத்து சப்ஜெக்ட் படங்களில் நடித்து மக்கள் மனதை வென்றவர் விஜயகாந்த். வைதேகி காத்திருந்தாள், பொன்மனச் செல்வன், நெஞ்சிலே துணிவிருந்தால், பட்டத்து ராணி, அலை ஓசை, நானே ராஜா நானே மந்திரி, சின்னக் கவுண்டர், பெரிய மருது, சேதுபதி ஐபிஎஸ், சொக்கத் தங்கம் என பல விஜயகாந்த் படங்களில் கவுண்டமணி நகைச்சுவையில் கலக்கி உள்ளார்.

இந்நிலையில் 84 வயதாகும் கவுண்டமணி அதிகப்படியாக பொது இடங்களுக்கோ நிகழ்ச்சிகளுக்கோ வருகைத் தரமால் இருந்து வந்த நிலையில், விஜயகாந்த் மறைந்த செய்தி கேட்டதும் தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருக்கும் விஜயகாந்தின் உடலை நேரில் சென்று பார்த்து விட்டு மாலை அணிவித்துள்ளார்.

மேலும் நகைச்சுவை நடிகர்கள், நடிகர் சங்க பிரபலங்கள் என பலரும் விஜயகாந்தின் உடலுக்கு தொடர்ந்து அஞ்சலி செலுத்தி இறுதி மரியாதையை செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.