விக்ரம் நடிப்பில் உருவாகி ரிலீசுக்கு தயாராக இருக்கும் படம் 'துருவ நட்சத்திரம்'. கெளதம் மேனன் இயக்கியுள்ள இப்படத்தின் ரிலீஸ் தொடர்ந்து தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் நாளை வெளியாகவதாக இருந்த 'துருவ நட்சத்திரம்' படத்திற்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

'சூப்பர் ஸ்டார்' என்ற படத்தை இயக்குவதற்காக ஆல் இன் பிட்சர்ஸ் நிறுவனத்திடம் ரூ.2.40 கோடி வாங்கியுள்ளார் கெளதம் மேனன். இது தொடர்பாக ஆல் இன் பிட்சர்ஸ் நிறுவனம் பணத்தை திருப்பி வழங்கக்கோரி நீதிமனறத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்நிலையில் இவ்வழக்கின் படி நாளை காலை 10.30 மணிக்குள் ஆல் இன் பிட்சர்ஸ் நிறுவனத்திடம் வாங்கிய ரூ. 2 கோடியை கெளதம் மேனன் திருப்பி வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் 'துருவ நட்சத்திரம்' ரிலீசுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

மேலும், நாளை காலைக்குள் பணத்தை திரும்பி வழங்கவில்லை என்றால் 'துருவ நட்சத்திரம்' படத்தை வெளியிடக்கூடாது எனவும் செக் வைத்துள்ளது. இதனால் திட்டமிட்டப்படி நாளை படம் வெளியாகுமா என்ற குழப்பம் ரசிகர்கள் இடையில் வெடித்துள்ளது.