பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி பல்வேறு சண்டைகள், சர்ச்சைகள் என நாளுக்கு நாள் பரபரப்புடன் ஓடி வருகிறது. கடந்த வாரம் இந்த சீசனில் இருந்து ஐஷு குறைந்த வாக்குகளில் அடிப்படையில் எலிமினேட் செய்யப்பட்டு வீட்டை விட்டு அனுப்பப்பட்டார். அதனை தொடர்ந்து இந்த வார பிக்பாஸ் வீட்டின் தலைவர் ஆகியுள்ளார் தினேஷ்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் மாயா, பூர்ணிமா, ஜோவிகா என குழுவாக சேர்ந்து செயல்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு மிகப்பெரிய அளவில் டப் கொடுத்து வருகின்றனர் தினேஷ், விஜே அர்ச்சனா, விசித்ரா.

இந்நிலையில் இன்றைய தினத்துக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகி சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் ஏதோ ஒரு வாக்குவாதம் பிக்பாஸ் வீட்டில் நடக்கிறது. இதில் ஜோவிகா குறித்து தினேஷிடம் பேசும் விசித்ரா, 'கேம்முன்னு நினைச்சு ஜோவிகா ஆடல. அவுங்களா வந்து வலையில விழுறாங்க. நான் எதார்த்தமா தான் படிப்பு பற்றி பேசுனேன். ஆனால் அதனை பெரிய பிரச்சனை ஆகியதே ஜோவிகா தான் என்கிறார்.

அதற்கு தினேஷ், 'அவுங்க மட்டும் கேம் விளையாடுவாங்க. நான் விளையாட கூடாதுன்னு ஜோவிகா நினைக்குறாங்கல்ல. அதுவே அவங்களோட கேமா இருக்கலாம் என்கிறார். அதனை தொடர்ந்து விசித்ரா, என்னை பொறுத்தவரை அவள் பாய்சனஸ் ரிலேஷன்ஷிப்ல இருக்கா. அவ கூட இருக்க எல்லாருமே டாக்சிக் என்கிறார் விசித்ரா. இப்படியாக இந்த ப்ரோமோ வீடியோ முடிவடைந்துள்ளது.

இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வர, ஜோவிகா பற்றி விசித்ரா சொன்ன விஷயம் ரொம்பவே கரெக்ட் என கூறி வருகின்றனர் பார்வையாளர்கள். இந்த வார எப்படியும் விசித்ரா, ஜோவிகா இடையே சண்டை வெடிக்கும் என எதிர்பார்க்கின்றனர் ரசிகர்கள்.