பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி பல அதிரடி திருப்பங்கள் மற்றும் விறுவிறுப்புடன் ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்த வாரம் எவிக்சனில் ஐஷு வெளியேற்றப்ப்பட்டுள்ளதை தொடர்ந்து, மீதமுள்ள போட்டியாளர்களுடன் பிக்பாஸ் வீடு களைக்கட்ட ஆரம்பித்து விட்டது. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் புதிதாக இரண்டு பேர் என்ட்ரி கொடுத்துள்ளது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

இந்நிலையில் இன்றைய தினம் வெளியாகியுள்ள பிக்பாஸ் தொடர்பான ப்ரோமோவில் குக் வித் கோமாளி புகழ், நடிகை சிருஷ்டி டாங்கே இருவரும் இருப்பதை நோட் செய்து சோஷியல் மீடியாவில் வைரலாக்கி வருகின்றனர் ரசிகர்கள்.

ஏற்கனவே வைல்ட் கார்டு என்ட்ரியாக அன்ன பாரதி, தினேஷ், விஜே அர்ச்சனா, பிராவோ, கானா பாலா உள்ளிட்டோர் நுழைந்தனர். இவர்களில் தினேஷ், அர்ச்சனா இருவரும் மாயா கேங்கிற்கு கடுமையாக டஃப் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது குக் வித் கோமாளி புகழ், சிருஷ்டி டாங்கே ஆகிய இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளது ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. ஆனாலும் அவர்கள் கெஸ்டாக உள்ளே நுழைந்திருக்கலாம் அல்லது தீபாவளி செலிபிரேஷன் காரணமாக பிக்பாஸ் வீட்டுக்குள் வந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இதனிடையில் இந்த பிக்பாஸ் வீட்டின் கேப்டன் ஆகியுள்ளார் தினேஷ். வைல்ட் கார்டு என்ட்ரியாக நுழைந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இவர், பிக்பாஸ் வீட்டில் எல்லா நேரத்திலும் பாயிண்டாக பேசி வருகிறார். மேலும் கடந்த வாரம் முழுக்க மாயா கேங்கை தட்டிக்கேட்ட தினேஷ், இந்த வாரம் கேப்டனும் ஆகியுள்ளதால், இந்த வாரம் தரமான சம்பவங்கள் பல அரங்கேறலாம் என பார்வையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.