நடிகை நயன்தாரா அடுத்தடுத்த முன்னணி ஹீரோக்களுடன் நடிப்பது மட்டுமில்லாமல் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் படங்களிலும் சிறப்பாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் நயன்தாராவின் 75வது படமாக உருவாகியுள்ளது அன்னப்பூரணி படம். சமீபத்தில் இந்தப்படத்தின் டைட்டில் வீடியோவுடன் வெளியாகி சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. படத்தில் பிராமண பெண்ணான நயன்தாரா பிசினஸ் லாஜிஸ்டிக்ஸ் புத்தகத்தை படித்துக் கொண்டிருப்பதாகவும் அந்த புத்தகத்தில் நான் வெஜ் உணவுகளை பற்றிய புத்தகத்தை ஒளித்து வைத்து படிப்பதாக காணப்பட்டது.

குடும்பத்தில் மற்றவர்கள் பூஜை, வழிபாடு என்றிருக்க நயன்தாரா இப்படி நடந்துக் கொள்வதாக காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் ரிலீஸ் திகதியை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். நயன்தாரா, ஜெய், சத்யராஜ், கேஎஸ் ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, சச்சு, ரேணுகா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள அன்னப்பூரணி படத்தின் புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ள படக்குழுவினர் டிசம்பர் 1ம் திகதி படம் ரிலீசாகவுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த போஸ்டரில் சமையலறையில் கரண்டியை பிடித்தபடி நயன்தாரா காணப்படுகிறார். இந்தப் படத்தை ஷங்கரின் உதவி இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார். தமன் இசையமைத்துள்ளார். படம் டிசம்பர் 1ம் திகதி ரிலீசாகவுள்ள நிலையில், அடுத்தடுத்த அப்டேட்களை படக்குழுவினர் வெளியிடவுள்ளனர். விரைவில் இசை வெளியீடும் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.