நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் அக்டோபர் 27 ஆம் திகதி வெளியான படம் தேஜஸ். சர்வேஷ் மேவாரா எழுதி இயக்கிய இப்படத்தில் அன்ஷுல் சவுகான் மற்றும் வருண் மித்ரா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தியாவின் போர் விமானத்திற்கு தேஜாஸ் என்று பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பெயர் சூட்டினார். அந்த போர் விமானத்தில் சாகசம் செய்யும் போர் விமானியாக நடிகை கங்கனா ரனாவத் இத்திரைப்படத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

மிகுந்த பொருட் செலவில் வெளியான இத்திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் படு மோசமான வசூலை பெற்றுள்ளது. தேஜஸ் திரைப்பட அனைத்து இடத்திலும் காற்று வாங்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பீகாரில் பிரபலமான ஒரு தியேட்டரில் ஒரு டிக்கெட் கூட விற்பனை ஆகவில்லை.

இன்னும் சில தியேட்டர்களில், 5 பேர், 10 பேர் மட்டுமே வருவதால் பல தியேட்டர்கள் காட்சிகள் ரத்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், உத்திரப்பிரதேச முதலமைச்சர் ஆதித்யநாத் லக்னோவில் சிறப்பு காட்சியாக இப்படத்தை பார்த்து விட்டு நெகிழ்ச்சியில் கண்கலங்கினார் என்று கங்கனா தெரிவித்திருந்தார்.

மேலும் இப்படம் பெண்களின் முன்னேற்றத்திற்கான படம் இல்லை. பெண்களின் சக்தியை தெரிந்து கொள்வதற்கான படம் என்று பாராட்டியதாக கங்கனா பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.