பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நடிகர் தினேஷ் வந்துள்ளார். இதையடுத்து பிக் பாஸ் மேடையில் பேசிய தினேஷ், என் வாழ்க்கை நன்றாகத்தான் சென்று கொண்டு இருந்தது. ஆனால், வாழ்க்கையில் திடீரென ஒரு சறுக்கல் ஏற்பட்டு திடீரென எட்டு வருடம் பின்னால் போய்விட்டது போன்ற ஒரு உணர்வு எனக்கு இருக்கிறது.

வாழ்க்கை எப்போது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் மாறும் என்று சொல்வார்கள். ஆனால், இந்த அளவுக்கு மோசமான ஒரு நிலையை வாழ்க்கை எனக்கு கொடுக்கும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை என மனைவி ரச்சிதா மகாலட்சுமியை பிரிந்தது குறித்து கமலின் முன்பாக மறைமுகமாக பேசினார் தினேஷ்.

பெங்களுரைத் சேர்ந்த ரச்சிதா. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் தொடரில் தன்னுடன் இணைந்து நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சில மாதத்திற்கு முன், நடிகை ரச்சிதா மாங்காடு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் தினேஷ் எனது செல்போனுக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பி மிரட்டுகிறார் என்று புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் மாங்காடு அனைத்து மகளிர் போலீசார் தினேசை விசாரணைக்கு அழைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.