லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் திகதி வெளியாகி வசூலை அள்ளி வருகிறது. 

பல விமர்சனங்களுக்கு மத்தியிலும் இப் படம் 500க்கு மேல் வசூலாகி உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், லியோ படத்தின் மகத்தான வெற்றியை கொண்டாடும் வகையில் சென்னையில் பிரம்மாண்ட விழா நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

இதற்கு தமிழக காவல்துறையும் அனுமதி வழங்கி உள்ளதால், நவம்பர் 1 ஆம் திகதி சக்சஸ் மீட் நடைபெற உள்ளது. அந்த வெற்றி விழாவில், 200 முதல் 300 கார்களுக்கு மட்டுமே அனுமதி என்றும், பாதுகாப்பு காரணம் கருதி பேருந்தில் ரசிகர்கள் வர அனுமதி இல்லை என்றும் காவல் துறை தெரிவித்துள்ளது.

லியோ படத்தின் இசைவெளியீட்டு விழா பாதுகாப்பு காரணம் காட்டி தயாரிப்பு நிறுவனம் ரத்து செய்த நிலையில்,தற்போது அதே நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் சக்சஸ் மீட் நடைபெற உள்ளதால், ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.