படங்களை இயக்குவது மட்டுமில்லாமல், விளம்பர படங்களை இயக்குவது, பாடல் எழுதுவது, பட தயாரிப்பு என அனைத்து வேலைகளையும் செய்து வருகிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன். நயன்தாராவின் ஜவான் பட வெற்றிக்கு பிறகு முழுவதுமாக வெகேஷன் மோடுக்கு சென்ற விக்னேஷ் தற்போது மீண்டும் இயக்கத்திற்கு வந்திருக்கிறார்.

இதனிடையே இந்திய கிரிக்கெட்டர் தோனி கிரிக்கெட்டில் மூலம் பல ரசிகர்களை கொண்டுள்ளார். இவர் கிரிக்கெட் மூலமாக மட்டுமில்லாமல் விளம்பர படங்கள் மூலமாகவும் ரசிகர்களை கவர்ந்துவருகிறார். கிரிக்கெட் சார்ந்த விளம்பரங்கள் மட்டுமன்றி பல வகை விளம்பரங்களிலும் நடித்திருக்கிறார் தோனி.

அந்த வகையில், தற்போது ஒரு தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கான விளம்பர படத்தில் நடிக்கிறார் தோனி. இந்த விளம்பர படத்தில் அவருடன் இணைந்து காமெடி நடிகரான யோகி பாபு நடிக்கிறார். இந்த விளம்பர படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இது குறித்த ஒரு பதிவையும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் விக்கி.