லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் விஜய்க்கு மனைவியாக த்ரிஷா நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் விஜய் - த்ரிஷா கெமிஸ்ட்ரி இன்னமும் அப்படியே இருப்பதாக சிலாகித்தனர்.மேலும் படத்தில் பார்ப்பதற்கு ஆவலாக இருப்பதாகவும் கூறினர்.

இந்நிலையில் லியோ படத்தில் த்ரிஷா வாங்கியதாக ஒரு சம்பள தொகை கூறப்படுகிறது. அதன்படி அவர் இப்படத்துக்காக 5 கோடி ரூபாய் வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கோலிவுட்டை பொறுத்தவரை நயன்தாராதான் அதிகம் சம்பளம் வாங்கும் ஹீரோயினாக திகழ்ந்துகொண்டிருக்கிறார். அவர் பத்து கோடி ரூபாய் சம்பளமாக வாங்குவதாக தெரிகிறது.

இந்நிலையில் த்ரிஷா நடித்திருக்கும் லியோ படம் கண்டிப்பாக ஹிட்டாகிவிடும். எனவே அடுத்தடுத்த படங்களில் த்ரிஷா கண்டிப்பாக சம்பளத்தை உயர்த்துவார். அதன் காரணமாக சம்பள விஷயத்தில் நயன்தாராவை த்ரிஷா கூடிய விரைவில் நெருங்கிவிடுவார் என்று அவரது ரசிகர்கள் கூற ஆரம்பித்திருக்கின்றனர்.