விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் 6 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள நிலையில் தற்போது 7வது சீசனை சிறப்பாக நடத்தி வருகிறது. இந்நிலையில் இன்றைய தினம் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி 16வது நாளை எட்டியுள்ளது.

இதன் அடுத்தடுத்த ப்ரமோக்களை விஜய் டிவி தற்போது வெளியிட்டுள்ளது. இதில் 2வது ப்ரமோவில் தாங்கள் கடந்துவந்த பாதை குறித்த பகிர்வுகளை போட்டியாளர்கள் செய்திருந்தனர். இதில் நடிகர் யுகேந்திரன், தன்னுடைய பெயரின் பின்னால் உள்ள வாசுதேவன் என்ற பெயர் தனக்கு பல இடங்களில் சங்கடங்களை கொடுத்ததாக தெரிவித்துள்ளார். இதேபோல அடுத்தடுத்த போட்டியாளர்கள் தாங்கள் கடந்துவந்த பாதையை பேசினர்.

இதனிடையே இறுதியாக பேசிய கூல் சுரேஷ், தான் 8வது படிக்கும்போது மிகவும் கஷ்டப்பட்டதாகவும் தினந்தோறும் காலையில் பேப்பர் போட போவேன் என்றும் கூறினார். இதனால் சக போட்டியாளர்கள் கண் கலங்கியதையும் பார்க்க முடிந்தது.

அடுத்தடுத்து சுசித்ரா, ஜோவிகா உள்ளிட்டவர்களும் தாங்கள் கடந்து வந்த பாதை குறித்து பேசியுள்ளதை இந்த ப்ரமோவில் பார்க்க முடிந்தது. இன்றிரவு நிகழ்ச்சியில் இதுகுறித்து முழுமையாக ரசிகர்கள் பார்க்க முடியும்.