லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் 'லியோ' படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வரும் நிலையில், படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் 'லியோ' பட சென்சார் விவரம் குறித்த முக்கியமான தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி படத்தில் 13 இடங்களில் சென்சார் போர்டு கத்தரி போட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தில் இடம்பெற்றுள்ள புகைப்பிடிக்கும் காட்சி, போதை மற்றும் வன்முறை தொடர்பான காட்சிகள் உட்பட 13 இடத்தில் கட் போடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் படத்தில் இடம்பெற்றுள்ள ஆபாச வார்த்தைகள் மியூட் செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

'லியோ' படத்தில் சென்சார் போர்டு 13 கட்டுகள் போட்டிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையில் கடந்த 5 ஆம் திகதி வெளியான 'லியோ' பட டிரெய்லர் சில திரையரங்குகளில் திரையிடப்பட்டது. இதுவும் தற்போது சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. சென்சார் செய்யப்படாத டிரெய்லரை எப்படி திரையிடலாம் என விளக்கம் கேட்டு சம்பந்தப்பட்ட திரையரங்குகளுக்கு மத்திய தணிக்கை வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த விவகாரமும் பரபரப்பை கிளப்பியுள்ளது. 'லியோ' படத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய், திரிஷா இருவரும் இணைந்து நடித்துள்ளனர். அண்மையில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் இணையத்தில் பட்டையை கிளப்பி வருகிறது. டிரெய்லரே வெறித்தனமாக, தீயாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள 'லியோ' படம் வரும் 19 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.