சினிமா பிரபலங்கள் சூட்டிங்கின் போது ஓய்வு எடுக்கவும் மேக்கப் செய்து கொள்ளவும் கேரவனை பயன்படுத்துகின்றனர். முன்னணி நட்சத்திரங்கள் சூட்டிங்கில் பங்கேற்கிறார்கள் என்றால் சூட்டிங் ஸ்பாட்டிற்கு அருகிலேயே சகல வசதிகளுடன் கூடிய ஒரு கேரவன் நிறுத்தப்பட்டு இருப்பதை பல இடங்களில் பார்த்து இருக்கலாம்.

இந்நிலையில் சினிமா சூட்டிங் ஸ்பாட்டின் போது நடிகர் சூரியின் கேரவனை உள்ளே சென்று பார்க்க அங்கு வந்த சிறுவர்கள் ஆசைப்பட்டுள்ளனர். சூரியும் உடனடியாக சிறுவர்களையும் கேரவனுக்குள் அனுமதித்து அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றியுள்ளார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. கேரவனின் வாசலில் நிற்கும் சூரியிடம் வெளியே நின்ற சிறுவர், சிறுமியர்கள், உள்ளே சென்று பார்க்க வேண்டும் என்று மழலை குரலில் கேட்கின்றனர். சூரியும் உடனே, அது மேக் அப் போடும் ரூம் என்று சொல்கிறார். சிறுவர்கள் விடாமல் உள்ளே சென்று பார்க்கனும்; ஒரே ஒரு முறை அனுமதியுங்கள் என்று கேட்கவே, சத்தம் போடாமல் வந்து பாருங்கள் என்று அனுமதிக்கிறார்.

உடனே அங்கு நின்ற சிறுவர்கள் மகிழ்ச்சியோடு உள்ளே சென்று பார்த்து விட்டு வருகின்றனர். அதோடு சிறுவர்களை அழைத்து சென்று கேரவனை காண்பிக்கவும் செய்கிறார். சிறுவர்கள் அனைவரும் கேரவனை பார்த்து விட்டு மகிழ்ச்சியுடன் ஒவ்வொருவராய் வெளியே வந்தனர். பின்னர் வெளியே வந்த சிறுவர்களிடம் அனைவரும் நன்றாக படிக்க வேண்டும் என்று அட்வைஸ் செய்து அனுப்பினார் சூரி. சூரியின் இந்த செயல் சமூக வலைத்தளங்களில் பலராலும் பாராட்டை பெற்று வருகிறது. நெட்டிசன்கள் சூரியின் செயலை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.