தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக திகழும் சித்தார்த் நடிப்பில் அண்மையில் வெளியான படம் 'சித்தா. சமீப காலமாக இவரது நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் பெரியளவில் வரவேற்பை பெறாத நிலையில் தற்போது 'சித்தா' வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்து வருகிறது. இந்நிலையில் 'சித்தா' படம் குறித்து நடிகர் சிம்பு தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பதிவு சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அதில், 'மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக 'சித்தா' படம் இருக்கிறது. மிகவும் தீவிரமான கதையை அனைவருக்கும் புரியும்படி மென்மையாக, தெளிவாக இயக்கியுள்ளார் அருண்குமார். இந்தப்படத்தை தேர்ந்தெடுத்து தயாரித்து நடித்ததற்காகவே சித்தார்த்தை நினைத்து பெருமைப்படுகிறேன்' என பதிவிட்டுள்ளார் சிம்பு.

அவரின் இந்த பதிவு சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனிடையில் 'சித்தா' படத்திற்கு குவிந்து வரும் பாசிட்டிவ் விமர்சனத்தால் திரையரங்குகளில் படத்திற்கான காட்சிகளும் அதிகரித்துள்ளன. இதனிடையில் 'சித்தா' படம் வெளியான ஐந்தே நாட்களில் ரூ. 11.5 கோடி வரை வசூலித்து சாதனை படைத்துள்ளது.