தமிழ் சினிமாவில் இப்போதுவரை நடிகை த்ரிஷா டாப் ஹீரோயின்களில் ஒருவராக திகழ்ந்துவருகிறார்.

பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களிலும் குந்தவையாக கலக்கியிருந்தார் த்ரிஷா.

அடுத்ததாக லியோ படத்தில் நடித்திருக்கிறார். அதேபோல் அஜித்துடன் விடாமுயற்சி படத்திலும் த்ரிஷா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் த்ரிஷாவுக்கு தற்போது வயது 40 ஆகும். ஆனால் இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை.ஏற்கனவே தொழிலதிபர் ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்தாலும் ஏதோ காரணத்தால் அந்த நிச்சயதார்த்தம் திருமணம்வரை செல்லாமல் நின்றுவிட்டது.

பொன்னியின் செல்வன் பட ப்ரோமோஷனின்போது திருமணம் குறித்து த்ரிஷாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த த்ரிஷா திருமணத்துக்கு பிறகான விவாகரத்தில் தனக்கு உடன்பாடு இல்லை என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது த்ரிஷா திருமணம் குறித்து புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி த்ரிஷாவுக்கு பிரபல தயாரிப்பாளருடன் விரைவில் திருமணம் நடைபெறவிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த தயாரிப்பாளர் தெலுங்கு திரையுலகமா இல்லை தமிழ் திரையுலகமா என்று தெரியவில்லை எனவும் கூறப்படுகிறது.

அதேசமயம் இந்தத் தகவலில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்றும் தெரியவில்லை எனவும் திரையுலகில் ஒருதரப்பினர் சொல்கின்றனர்.