விஷால் நடிப்பில் உருவாகியுள்ள மார்க் ஆண்டனி படத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இதற்கெல்லாம் காரணம் நேற்று வெளியான மார்க் ஆண்டனி ட்ரெய்லர் தான் என சொல்லப்படுகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் விஷால், எஸ்ஜே சூர்யா, செல்வராகவன், சுனில், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

விஷால், எஸ்ஜே சூர்யா காம்போவில் அதகளமான காமெடி ஜானரில் மார்க் ஆண்டனி ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் 15ம் திகதி சந்திரமுகி 2 படத்துடன் மோதவிருக்கும் மார்க் ஆண்டனிக்கு திடீரென ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சந்திரமுகி 2-க்கு மார்க் ஆண்டனி செம்ம டஃப் கொடுக்கும் எனத் தெரிகிறது. மார்க் ஆண்டனி ட்ரெய்லருக்கு கிடைத்த வரவேற்பால், இந்தப் படத்தின் ஓடிடி உரிமையை வாங்க கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாம்.

முன்னணி ஓடிடி நிறுவனங்களுக்கு இடையேயான போட்டியில், அமேசான் ப்ரைம் மார்க் ஆண்டனியை தட்டித் தூக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக பல கோடிகளில் பிஸினஸ் நடந்துள்ளதும் தெரியவந்துள்ளது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.