ஆக்லாந்தின் North Shore இல் வாயு கசிவு காரணமாக சாலைகள் மூடப்பட்டுள்ளன.

Takapuna பகுதியில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து அப்பகுதியில் அனைவரது தொலைபேசிகளுக்கும் எச்சரிக்கை செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

Takapuna வில் தீயணைப்பு மற்றும் அவசர சேவைகளுடன் பொலிஸார் சம்பவ இடத்தில் உள்ளனர்.

சம்பவம் Killarney தெருவில் நிகழ்ந்துள்ளது, இதன் விளைவாக, Lake Pupuke and Anzac Street இடையே சுற்றிவளைப்புகள் உள்ளன.

பல சாலைகள் மூடப்பட்டுள்ளன, மேலும் அப்பகுதியில் போக்குவரத்து நிர்வாகத்திற்கு பொலிஸார் உதவி வருகின்றனர்.

மாலை 4 மணிக்கு முன்னதாக Takapuna பகுதியில் உள்ள தொலைபேசிகளுக்கு, ஆண்டர் பிளேஸை சுற்றியுள்ள பகுதிகளை தவிர்க்குமாறு மக்களை எச்சரிக்கும் வகையில் அவசர எச்சரிக்கை செய்தி அனுப்பப்பட்டது.

இதுகுறித்து செய்தியாளர் கூறுகையில், அப்பகுதியில் கடும் வாயு துர்நாற்றம் வீசுகிறது என தெரிவித்தார்.

இதேபோல் கடந்த வியாழன் அன்று ஆக்லாந்தின் சிபிடியில் வாயு கசிவு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

செய்தி நிருபர் - புகழ்