Hastings புறநகர்ப் பகுதியான Flaxmere இல் உள்ள ஒரு கட்டிடத்தில் ஒருவர் துப்பாக்கியுடன் இருந்ததாகப் புகார் வந்ததை அடுத்து, இன்று மதியம் ஒரு பள்ளி பூட்டப்பட்டது.

Wilson வீதியை காவல் துறையினர் சுற்றி வளைத்து, அதன் அருகிலுள்ள பீட்டர்ஹெட் பள்ளியை பூட்டுமாறு அறிவுறுத்தினர்.

சுமார் 45 நிமிடங்கள் பள்ளி மூடப்பட்டதாகவும், ஆனால் மதியம் 2.30 மணியளவில் மீண்டும் திறக்கப்பட்டதாகவும் பள்ளி செய்தித் தொடர்பாளர் கூறினார்.

குழந்தைகள் அனைவரும் பத்திரமாக உள்ளனர் என அவர் தெரிவித்தார்.

சுற்றிவளைப்பு அகற்றப்பட்டதை பொலிசார் உறுதிப்படுத்தினர்.

மேலும் அதிகாரிகள் ஒரு முகவரியில் சோதனை மேற்கொண்டு அங்கிருந்த குடியிருப்பாளர்களிடம் விசாரணை நடத்தினர்.

செய்தி நிருபர் - புகழ்