Dunedin தெற்கில் உள்ள மாநில நெடுஞ்சாலை 1 இல் இரண்டு வாகனங்கள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று மதியம் 12.15 மணியளவில் Titri என்ற இடத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் நான்கு பேர் Dunedin மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர் ‌

Titri மற்றும் Bungards சாலைக்கு இடையே சாலை மூடப்பட்டுள்ளது.

வாகன ஓட்டிகள் அந்தப் பகுதியைத் தவிர்க்கவும், மாற்றுப்பாதைகளைப் பின்பற்றவும் Waka Kotahi மற்றும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தி நிருபர் - புகழ்