ஆக்லாந்து பல்கலைக்கழகத்தில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து குறித்த கட்டிடத்தில் இருந்த அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

பல்கலைக்கழகத்தின் மருத்துவ அறிவியல் கட்டிடத்தில் இந்த வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இன்று பிற்பகல் 1.40 மணியளவில் தீ எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்ட நிலையில், வெடி பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மூன்று தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஒரு சிறப்புப் பிரிவு வெடிப் பொருள்களைக் கையாண்டது.

Grafton வளாகத்தைச் சுற்றியுள்ள சாலைகள் மூடப்பட்டு, ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் அங்கிருந்து விலகி இருக்குமாறு எச்சரிக்கப்பட்டனர்.

தீயணைப்புக் குழுவினர் பொருளை ஆக்லாந்து Grafton ரக்பி மைதானத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர், அங்கு அவர்கள் ஒரு துளை தோண்டி அதை வெடிக்கச் செய்ய உள்ளனர்.

மைதானத்தில் இருந்து 150 மீட்டர் வரை சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

செய்தி நிருபர் - புகழ்