இன்று பிற்பகல் ஒடாகோவில் உள்ள Mosgiel அருகே விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி உள்ளது.

இந்த விபத்தில் ஒருவர் காயமடைந்ததை அடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

Dukes சாலையின் வடக்கில் உள்ள Taieri Airfield அருகே சிறியரக விமானம் ஒன்று மாலை 4 மணியளவில் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஒருவர் மிதமான காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

செய்தி நிருபர் - புகழ்