Wairoa வில் கிட்டத்தட்ட மூன்று இலட்சம் டொலர்கள் மதிப்புள்ள நண்டுகளை கருப்பு சந்தையில் விற்ற நபருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

60 வயதான ஜான் நோஹோதிமா என்ற குறித்த நபர் முதன்மை தொழில்துறை அமைச்சகத்தால் (MPI) குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து அவர் இரண்டு ஆண்டுகள் மற்றும் இரண்டரை மாதங்கள் சிறையில் அடைக்கப்படுவார் என்று Wairoa மாவட்ட நீதிமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் 4664 நண்டுகளை ஒரு கருப்பு சந்தை வளையத்திற்கும் மற்றும் அவரது சமூகத்தில் உள்ளவர்களுக்கும் விற்று, தனது சட்டவிரோத செயல்கள் மூலம் 68,690 டொலர்கள் சம்பாதித்தார்.

இதற்கிடையில், அவரது சகோதரி அன்னே நோஹோதிமா (53) தனது சகோதரர் வேட்டையாடிய நண்டுகளில் 210 ஐ விற்றதற்காக 100 மணிநேர சமூகப் பணி செய்ய வேண்டும் என Tauranga மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

மேலும் கறுப்புச் சந்தை வளையத்தின் பத்து உறுப்பினர்கள் தங்கள் வீட்டுக்காவல் மற்றும் சமூகப் பணி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

செய்தி நிருபர் - புகழ்