Homegrown Juice நிறுவனம் பொதியிடல் நடவடிக்கையின் போது ஏற்பட்ட சிக்கல் காரணமாக அதன் Kombucha ஜூஸ் பாட்டிலுக்குள் கண்ணாடித் துண்டுகள் இருப்பதாக கூறி அவற்றை திரும்பப் பெற்று வருகின்றது.

17 ஆகஸ்ட் 2024 க்கு முன் என்ற திகதியை குறிக்கும் Homegrown Juice கம்பெனியின் Raw Kombucha Sparkling Ginger (350ml) பாட்டில்களை மட்டுமே முதன்மைத் தொழில்துறை அமைச்சகம் (MPI) தற்போது திரும்பப் பெற்று வருகின்றது.

நியூசிலாந்து முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட பல்பொருள் அங்காடிகள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களில் இந்த தயாரிப்பு விற்கப்படுகிறது, ஆனால் ஏற்றுமதி செய்யப்படவில்லை என MPI தெரிவித்துள்ளது.

இந்தக் குறிப்பிட்ட Kombucha பாட்டிலை வைத்திருக்கும் எவரும் அதைக் குடிக்கக் கூடாது, மேலும் அவர்கள் வாங்கிய கடையைத் தொடர்புகொண்டு முழுப் பணத்தையும் திரும்பப் பெறலாம்.

இந்த Kombucha உடன் தொடர்புடைய காயங்கள் குறித்து எந்த புகாரும் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் அதை உட்கொண்ட எவரும் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் என்று முதன்மைத் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

செய்தி நிருபர் - புகழ்