Christchurch மிருகக்காட்சிசாலைக்கு வெளியே பயங்கர சத்தத்துடன் புகைகளை கிளப்பி ஆபத்தான முறையில் வாகனங்களை செலுத்திய சில ஓட்டுநர்கள் அங்குள்ள விலங்குகளை மிகவும் பயமுறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சத்தத்தை கேட்டு அதிர்ந்த விலங்குகள் வேலிகளுக்குள் ஓடி பலத்த காயங்களுக்கு ஆளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Orana வனவிலங்கு பூங்காவின் செய்தித் தொடர்பாளர் நாதன் ஹாக் கூறுகையில், சில விலங்குகள் கடுமையான சிராய்ப்பு மற்றும் காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார்.

நாங்கள் வைத்திருக்கும் சில விலங்குகள் மிகவும் மென்மையான சிறிய உயிரினங்கள், எனவே இந்த செயல்பாடு துரதிர்ஷ்டவசமாக நமக்கு கவலையை ஏற்படுத்துகிறது மற்றும் எங்கள் அழகான விலங்குகளுக்கு கவலைகளை ஏற்படுத்துகிறது‌ எனவும் அவர் தெரிவித்தார்.

வாகனச் சத்தம் பூங்காவில் உள்ள மற்ற விலங்குகளுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியது, இது வரவிருக்கும் பருவங்களில் அவற்றின் இனப்பெருக்கத்தை பாதிக்கலாம் என்று ஹாக் கூறினார்.

இந்நிலையில் மிருகக்காட்சிசாலைக்கு வெளியே விதிமீறலில் ஈடுபட்ட 16 வாகனங்களை அதிகாரிகள் கண்டறிந்து, இதுவரை 10 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

செய்தி நிருபர் - புகழ்