மேல் மாகாணத்தில் மார்ச் 15ஆம் திகதி முதல் மீண்டும் பாடசாலைகளை திறக்க சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் கல்வி அமைச்சு அனுமதி கோரியுள்ளது.

அது தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா கூறுகையில்,

தரம் - 5, தரம் - 11, மற்றும் தரம் - 13ஐ முதற்கட்டமாகவும், ஏனைய வகுப்புக்களை கட்டம் கட்டமாக திறக்கவும் கல்வி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது என அவர் கூறினார்.

பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக்கள் வழங்கிய அறிவுறுத்தல்களை கவனத்தில் கொண்டு சுகாதார அமைச்சகத்திற்கு இந்த திட்டம் அனுப்பப்பட்டுள்ளன.

இருப்பினும் , சுகாதார அமைச்சு இன்னும் அனுமதி வழங்கவில்லை. ஆகவே சுகாதார அமைச்சின் அனுமதியை பெற கல்வி அமைச்சகம் காத்திருக்கிறது.

மேல் மாகாணம் உட்பட நாட்டின் அனைத்து பாடசாலைகளும் மார்ச் 15 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும்.

விரைவில் அனுமதி பெறப்பட்டால், மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் அமைச்சகம் பொது அறிவிப்பை வெளியிடும் என்று அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.