இந்தியா: தமிழ்நாடு

அதிமுகவும் பாஜகவும் கடந்த சில காலமாகவே ஒரே அணியில் பயணித்து வருகிறது.

கூட்டணி தொடர்ந்தாலும் கூட இரு தரப்பிற்கும் இடையே அவ்வப்போது தொடர்ந்து மோதல் தொடர்ந்தே வருகிறது.

இப்போதும் கூட இரு தரப்பிற்கும் இடையே சில காலமாக மோதல் போக்கே இருந்து வருகிறது.

இப்போதும் கூட இரு தரப்பிற்கும் இடையே மோதல் போக்கே நிலவி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்திருந்தார்.

அதில் தமிழகத்தை ஆட்சி செய்த அனைத்து கட்சிகளும் ஊழல் கட்சிகள் எனக் கூறியிருந்தார். அது மட்டுமின்றி ஜெயலலிதா குறித்தும் சில கருத்துகளைக் கூறியிருந்தார்.

அவர் ஜெயலலிதா குறித்துச் சொன்ன கருத்துகள் அதிமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு இது குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், அமித் ஷா தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் வருவார் என்று சொல்லும் போது அது 2024இல் எனச் சொல்லவில்லை. வரும் காலத்தில் இங்கிருந்து ஒரு பிரதமர் வருவார். அது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். தகுதி இருப்பவர் வரட்டும்.

பிரதமர் மோடி இந்தியப் பிரதமராக வருவார் என யாராவது எதிர்பார்த்தார்களா. ஆனால் தகுதியும் திறமையும் இருந்ததால் தொடர்ந்து 2 முறை பிரதமராக இருந்துள்ளார். மூன்றாவது முறையும் நிச்சயம் பிரதமராகத் தொடர்வார். அந்தளவுக்கு மக்கள் மத்தியில் பெயர் வாங்கியுள்ளார். மக்களுக்காக உழைக்கிறார். நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைக்கிறார். அப்படி யார் வேண்டுமானாலும் பிரதமர் பதவிக்கு வரலாம். இவர் தான் என்று ஒரு குறிப்பிட்ட நபரை யாரும் குறிப்பிடவில்லை.

விரைவில் பாஜக சார்பில் தமிழ்நாடு முழுக்க நடைப்பயணம் மேற்கொள்ள உள்ளோம். வரும் கூட்டத்தைப் பார்த்தால் உங்களுக்கே புரியும் பாஜக எந்தளவுக்குத் தமிழ்நாட்டில் வளர்ந்துள்ளது என்று.

இது மக்களவை தேர்தலிலும் எதிரொலிக்கும். மக்கள் எந்த பக்கம் இருக்கிறார்கள். யாருக்கு ஆதரவளிக்கிறார்கள் என்பது இதில் தெரிந்துவிடும் என்றார்.