ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில்களுக்கு சிறப்பு உண்டு. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் முதன்மையான தொழில் சிறப்புகளை விளக்கும் விதமாக மலேசியாவில் பன்னாட்டு சிறு குறுந்தொழில் மாநாடு ஜூன் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெறவுள்ள இம்மாநாடு தென்னிந்தியாவில் உள்ள ஆந்திரா , கர்நாடகா , புதுச்சேரி , தமிழ்நாடு மாநிலங்களில் உள்ள தொழில் வளங்களை உள்ளடக்கிய நிகழ்வாக அமைந்துள்ளது.

இந்நிகழ்வில் தென்னிந்திய மற்றும் மலேசியாவில் உற்பத்தியாகும் பொருட்களை இறக்குமதி செய்யும் கனடா, ஐரோப்பா, சிங்கப்பூர், ஹொங்கொங், இலங்கை, ஜப்பான், ஆஸ்திரேலியா, வளைகுடா நாடுகள், நியூசிலாந்து, இந்தோனிஷியா, சீனா, தாய்லாந்து, மியன்மார் போன்ற நாடுகளைச் சேர்ந்த இறக்குமதியாளர்கள் மற்றும் மலேசிய இறக்குமதியாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்நிகழ்வை மலேசிய சிறு மற்றும் குருந்தொழில் அமைச்சகத்தின் SME Copr ஆதரவுடன், மலேசிய இந்திய வர்த்தக சங்கம் ( MAICCI ) மற்றும் உலகத் தமிழ் வர்த்தக சங்கம் இணைந்து நடத்த உள்ளது.

இந்நிகழ்வுக்கான விசா, தங்கும் இடம், உள்ளூர் போக்குவரத்து, வாகன வசதி, சலுகை விலையில் விமான பயணச்சீட்டு ஆகிய அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

மேலும் இந்நிகழ்வில் தென்னிந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளில் உள்ள தொழில் வர்த்தக சங்கங்கள் கலந்து கொள்ள உள்ளன என்று உலகத் தமிழ் வர்த்தக சங்கத் தலைவரும் நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுத் தலைவருமான செல்வக்குமார் தெரிவித்தார்.

செய்தியாளர்.
சி. தாமோதரன்