அமெரிக்கா இரு கட்சி ஆட்சி முறையை கொண்ட நாடு ஆகும். அங்கு ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி ஆகிய இரு கட்சிகள் மட்டுமே போட்டியிடும்.

தற்போது அமெரிக்காவில் ஜனநாயக கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அதிபராக ஜோ பைடன் உள்ளார்.

ஜோ பைடனின் பதவிக்காலம் முடியவுள்ளதால் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.

அமெரிக்காவை பொருத்தவரை அதிபர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெறவேண்டும்.

அந்த வகையில், குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் பலரும் அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து பலரும் தற்போதே களமிறங்கி வருகின்றனர். அந்த வகையில் அதிபர் தேர்தலில் போட்டியிட இருப்பதாக மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார். ஏற்கனவே முன்னாள் அதிபர் டொனல்ட் டிரம்ப் தானும் போட்டியிட இருப்பதாக கூறியிருக்கும் நிலையில் மைக் பென்சும் அறிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.

குடியரசுக் கட்சியின் மிகவும் பிரபலமான தலைவர்களில் ஒருவராக அறியப்படும் மைக் துணை ஜனாதிபதியாகவும் பதவி வகித்து இருக்கிறார்.

முன்னதாக இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலேவும் அதிபர் தேர்தலில் போட்டியிட இருப்பதாக கூறியிருக்கும் நிலையில், தற்போது மைக் பென்சும் அறிவித்துள்ளார். இதனால் அமெரிக்க அதிபர் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.