இந்தியா: தமிழ்நாடு

தமிழ்நாட்டில் வெயில் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. எதிர்பார்க்காத அளவிற்கு வெயில் உச்சம் அடைந்துள்ளது.

இந்நிலையில் கோடையில் நிலவும் கடும் வெயில் காரணமாகவும், வெப்ப அலை காரணமாகவும் மாணவர்கள் நலன் கருதி பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்க வேண்டும் என்று பெற்றோர்கள் பலரும் கோரிக்கை வைத்தனர்.

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர்கள் உடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனையை அடுத்து ஜூன் 7ம் திகதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்தார்.

ஆனால் மே மாதம் முடிந்தும் இன்னும் வெயில் குறையவில்லை. மாறாக வெயில் இப்போதுதான் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

இந்நிலையில் மாணவர்கள் நலன் கருதி பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

6-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 12ல் பள்ளிகள் திறக்கப்படும் எனவும் 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 14ல் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.