சட்டவிரோதமான முறையில் நாட்டுத் துப்பாக்கிகள் உட்பட பல ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் East Coast இல் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் Flaxmere பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சோதனை மேற்கொண்ட பொலிஸார் வீட்டில் தயாரிக்கப்பட்ட 6 நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து 23 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அவர் ஜூன் 26 ஆம் திகதி Hastings மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என பொலிஸார் தெரிவித்தனர்.

இதனிடையே நேற்றையதினம் Havelock North பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சோதனை மேற்கொண்ட பொலிஸார் இரண்டு துப்பாக்கிகள் மற்றும் ஏராளமான வெடிபொருட்களை மீட்டனர்.

இச்சம்பவம் தொடர்பில் 20 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அவர் இன்று Hastings மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.