நியூசிலாந்து முழுவதும் உள்ள பல்வேறு மெக்டொனால்ட் உணவகங்களில் வேகவைக்கப்படாத கோழி இறைச்சி பரிமாறப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளதாக முதன்மை தொழில்துறை அமைச்சகம் (MPI) இன்று உறுதிப்படுத்தியுள்ளது.

ஆக்லாந்து மற்றும் கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள மெக்டொனால்ட் உணவகத்தில்  பர்கர் மற்றும் Chicken Nuggets இல் வேகவைக்கப்படாத கோழி இறைச்சி பரிமாறப்பட்டதாக Stuff செய்தி இணையதளம் சமீபத்தில் செய்தி வெளியிட்டிருந்தது.

இதனிடையே நியூசிலாந்து உணவு பாதுகாப்பு திணைக்களம் பல்வேறு மெக்டொனால்ட் உணவகங்களில் கோழி இறைச்சி தொடர்பான பல புகார்களை பெற்றுள்ளதாக நியூசிலாந்து உணவு பாதுகாப்பு துணை இயக்குனர் ஜெனரல் வின்சென்ட் அர்பக்கிள் தெரிவித்தார்.

மேலும் பாதுகாப்பற்ற உணவை உண்ணும் எவரும் உணவின் மாதிரியுடன் எங்களை நேரடியாக தொடர்பு கொள்ளுமாறு நாங்கள் ஊக்குவிக்கிறோம் என அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த புகார்கள் குறித்து விசாரணைகள் தெரிவிக்கின்றன.