இந்தியா: தமிழ்நாடு

திருச்சியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழாவையொட்டி ஒத்தக்கடையில் உள்ள அவரது உருவ சிலைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் உரையாற்றிய அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது...

தமிழகத்தில் உள்ள பள்ளிகள் திட்டமிட்டபடி ஜூன் ஒன்றாம் திகதி திறக்கப்படும். 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையில் ஜூன் 1ஆம் திகதியும், தொடக்கப் பள்ளிகளான ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஜூன் 6ஆம் திகதியும் திட்டமிட்டபடி திறக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

மேலும் பள்ளி மாணவர்களுக்கு பள்ளி திறப்பு அன்றே புத்தகங்கள் வழங்கப்படும் எனவும் போதுமான புத்தகங்கள் கையிருப்பில் உள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே ஷஇலவச மிதி வண்டி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மடிக்கணினி வழங்குவது தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழகத்தில் வெயிலை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பை ஒத்தி வைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் திட்டமிட்டபடி ஜூன் 1 ஆம் திகதி பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.