நியூசிலாந்தின் வயது வந்தோர் மற்றும் குழந்தைகளுக்கான கடவுச்சீட்டுகளின் விலை நாளை முதல் அதிகரிக்கப்பட உள்ளது.

இதன்படி வயது வந்தோருக்கான பாஸ்போர்ட்டின் விலை 199 டொலர்களில் இருந்து 206 டொலர்களாகவும், குழந்தைகளுக்கான பாஸ்போர்ட்டின் விலை 115 டொலர்களில் இருந்து 120 டொலர்களாகவும் உயரும் என உள்நாட்டு விவகாரத் துறையின் துணைத் தலைமை நிர்வாகி, சேவை வழங்கல் மற்றும் செயல்பாடுகள் அதிகாரி மரியா  ராபர்ட்சன் இன்று அறிவித்தார்.