நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஜப்பானின் ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் கடந்த 2021 ஆம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருது மாஸ்டர் படத்துக்காக நடிகர் விஜய்க்கு வழங்கப்பட உள்ளது.

மேலும் தலைவி படத்துக்காக சிறந்த நடிகை விருது கங்கனா ரணாவத்துக்கும், சிறந்த படமாக சார்பட்டா பரம்பரை படத்துக்கும், சிறந்த இயக்குநர் விருது சார்பட்டா பரம்பரை படத்துக்காக இயக்குநர் பா.ரஞ்சித்துக்கும் வழங்கப்பட உள்ளது.

மேலும், சிறந்த இசையமைப்பாளர் விருது மாநாடு படத்துக்காக யுவன் ஷங்கர் ராஜாவுக்கும், சிறந்த துணை நடிகர் விருது ஜெய் பீம் படத்துக்காக மணிகண்டனுக்கும், சிறந்த திரைக்கதை விருது மாநாடு படத்துக்காக இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கும் வழங்கப்படவிருக்கிறது.