நீண்ட காலமாக பாடசாலைகளில் நிலவும் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் மற்றும் கணினி தொழில்நுட்ப ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை பூர்த்தி செய்ய உடனடியாக விண்ணப்பங்களை கோருமாறு ஜனாதிபதி கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.


அதன்படி, நியமனம் வழங்கப்பட்ட அதே பாடசாலையில் எட்டு வருட சேவையின் அடிப்படையில் சில பாடங்களுக்கான வெற்றிடங்களுக்கு புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில், நாட்டின் அனைத்து பாடசாலைகளிலும் காணப்படும் கணிதம், ஆங்கிலம், விஞ்ஞானம் மற்றும் கணினி தொழில்நுட்பம் உள்ளிட்ட பாடங்களின் ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்ப அடுத்த வாரம் விண்ணப்பங்களை கோர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.