இந்தியா: தமிழ்நாடு

அமேசான், பிளிப்கார்டில் வரும் பொருட்களுக்கு மட்டுமல்ல, ஓட்டலுக்கு, நமக்கு பிடித்த ஆப்களுக்கு, பள்ளிகளுக்கு, மருத்துவமனைகளுக்கு, ஜிம்களுக்கு, டெய்லர் கடைகளுக்கு, டியூசன் சென்டர்களுக்கு, இந்தி பயிற்சி வகுப்புகளுக்கு, பரத நாட்டிய வகுப்புகளுக்கு, ஆங்கில பயிற்சி வகுப்புகளுக்கு என பல விடயங்களுக்கு கூகுள் ரிவியூ போடப்படுகிறது.

அப்படித்தான் சென்னையை அடுத்த திருமுல்லைவாயல் போலீஸ் ஸ்டேசனுக்கு ஒரு இளைஞர் ரிவியூ கொடுத்துள்ளார்.

அந்த ரிவியூ பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

அந்த ரிவியூவில், பைக் டாக்குமெண்ட் இல்லாத காரணத்தால் திருமுல்லைவாயல் ஸ்டேசனுக்கு ஒரு நாள் நள்ளிரவு அழைத்துச் செல்லப்பட்டேன். மெயின் ரோட்டில் இருந்த அந்த போலீஸ் ஸ்டேசன் மிகவும் சுத்தமாக இருந்தது.

அங்கிருந்த காவலர்கள் என்னை துன்புறுத்தவில்லை. மாறாக அன்புடன் நடத்தினார்கள். என்னிடம் பிங்கர் பிரிண்ட் வாங்கி கொண்டு எந்த லஞ்சமும் வாங்காமல் அனுப்பி விட்டார்கள்‌ என தெரிவித்துள்ளார்.

மேலும் கடைசி வரியில் "உங்கள் வாழ்க்கையில் கண்டிப்பாக போக வேண்டிய இடம்" என்று ரெக்கமண்டேசன் கொடுத்துள்ளார்.

இதை பலரும் ஸ்கிரீன்ஷாட் எடுத்து விமர்சித்து வருகின்றனர்.