நியூசிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் நனையா மஹுதா நாளை சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ள உள்ளார்.

அவர் தலைநகர் பெய்ஜிங்கில் மாநில கவுன்சிலரும் சீன வெளியுறவுத்துறை அமைச்சருமான கின் கேங்கை சந்திக்க உள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான கொவிட்-19 பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, 2019-க்குப் பிறகு நியூசிலாந்து அமைச்சர் ஒருவர் சீனாவுக்குச் செல்வது இதுவே முதல் முறையாகும்.

இந்த பயணம் தொடர்பில் அமைச்சர் நனையா மஹுதா இன்று ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது...

சீனாவுடனான நியூசிலாந்தின் உறவு எங்களின் மிக முக்கியமான, சிக்கலான மற்றும் பரந்த அளவிலான ஒன்றாகும்.

இந்நிலையில் சீன வெளியுறவுத்துறை அமைச்சருடனான சந்திப்பில் மனித உரிமைகள், சுற்றுச்சூழல் மற்றும் உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு உட்பட பல தலைப்புகளில் விவாதிக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து அமைச்சர் நனையா மஹுதா சீன வணிகத் தலைவர்களைச் சந்திப்பார் எனவும் மற்றும் பெண் தலைவர்களுடன் ஒரு நிகழ்வை நடத்துவார் எனவும் கூறப்படுகிறது.