மத்திய Queenstown இல் உள்ள ஒரு மதுபான நிலையத்தில்
இன்று காலை தீ விபத்து இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக தீயணைப்பு பாதுகாப்பு ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

காலை 7 மணியளவில் Stanley தெருவில் உள்ள Speight's Ale House என்ற குறித்த மதுபான நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்திற்கு அவசர சேவைகள் அழைக்கப்பட்டன.

மேலும் தீயை கட்டுக்குள் கொண்டு வர சுமார் ஐந்து மணி நேரம் ஆனது.

தீ பிடித்து எரிந்த போது புகை நகரம் முழுவதும் மளமளவென பரவியது.

இச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

தீயினால் ஏற்பட்ட புகை காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகில் இருந்த கட்டிடத்தில் இருந்தவர்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தீ மளமளவென எரிந்ததால் Stanley தெரு முழுவதும் மற்றும் Ballarat தெருவின் பாதி பகுதிகள் தடுக்கப்பட்டன.

அதுதான் குயின்ஸ்டவுனுக்குள் நுழையும் முக்கிய நுழைவாயில், எனவே நகரைச் சுற்றி பல சரக்கு லாரிகள், பேருந்துகள் மற்றும் வாகனங்கள் சிக்கின.

இதனையடுத்து அப்பகுதியில் உள்ள தடைகள் இப்போது நீக்கப்பட்டுள்ளன.