நியூசிலாந்தில் பதின்ம வயது பெண்கள் (15-19 வயதுக்கு இடைப்பட்ட பெண்கள்) குழந்தைகளை பிரசவிக்கும் விகிதம் கடந்த 10 ஆண்டுகளில் பாதியாக குறைந்துள்ளது என Statistics NZ தெரிவித்துள்ளது.

Statistics NZ இன் புதிய தரவு, 2012 இல் 3786 ஆக இருந்த எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது ​​2022 இல் 1719 பெண்கள் குழந்தைகளை பிரசவித்துள்ளதாகக் காட்டுகிறது.

இதனிடையே 2022 இல் 34 பிரசவங்களில் 20 வயதுக்கு கீழ்ப்பட்ட ஒரு பெண், குழந்தையை பிரசவித்துள்ளார்.

ஆனால் 2012 உடன் ஒப்பிடுகையில் 16 பிரசவங்களில் 20 வயதுக்கு கீழ்ப்பட்ட ஒரு பெண், குழந்தையை பிரசவித்துள்ளார்.

இருப்பினும் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, 20 வயதிற்கு கீழ்ப்பட்ட பெண்கள் குழந்தை பிரசவிப்பது ஏழில் ஒன்று என்ற அடிப்படையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், 30 வயதிற்குட்பட்ட பெண்கள் குழந்தைகளை பிரசவிக்கும் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது.

2012 இல் 15 வயதிற்குட்பட்ட தாய்மார்களுக்கு 12 பிறப்புகள் இருந்தன, இது முந்தைய ஆண்டு 15 ஆகவும், 2007 இல் 51 ஆகவும் இருந்ததாக புள்ளியியல் நிபுணர் மைக்கேல் மக்அஸ்கில் கூறினார்.

டீன் ஏஜ் பிரசவங்களின் எண்ணிக்கை பல ஆண்டுகளாக குறைந்து வருகிறது.  2019 ஆம் ஆண்டில், புள்ளிவிவரங்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் பாதியாகக் குறைந்துள்ளன என அவர் தெரிவித்தார்.

பதின்ம வயது கருக்கலைப்புகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாக MacAskill கூறினார்.