ஹமில்டனில் போதைப்பொருள் விநியோகம் மற்றும் இறக்குமதி செய்த குற்றச்சாட்டின் பேரில் 35 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மெத்தாம்பேட்டமைன் சப்ளை மற்றும் Gamma Butyrolactone (GBL)/Gamma hydroxybutyrate (GHB) என்ற போதைப்பொருள் இறக்குமதி மற்றும் விநியோகம் தொடர்பாக பொலிஸார் மேற்கொண்ட 12 மாத விசாரணைக்குப் பிறகு நேற்று அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் இன்று மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார்.