கேப்ரியல் சூறாவளியால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க அரசாங்கம் 50 மில்லியன் டாலர் நிதியை அறிவித்துள்ளது.

வரும் வாரத்தில் இந்த நிதி விநியோகத்தை அமைச்சர்கள் இறுதி செய்வார்கள், ஆனால் இது வணிகங்களுக்கு உடனடி செலவினங்களைச் சந்திப்பதற்கும் தூய்மைப்படுத்தல் பணிகளுக்கும் உதவும்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள உள்ளூர் வணிகக் குழுக்கள், iwi மற்றும் உள்ளூர் அரசாங்கத்துடன் இந்த நிதி ஒதுக்கீட்டை ஒருங்கிணைப்போம் என நிதியமைச்சர் கிராண்ட் ராபர்ட்சன் கூறினார்.

இதனிடையே மேயர் நிவாரண நிதிகள், குடிமைத் தற்காப்புக் கொடுப்பனவுகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக ஆதரவு குழுக்களுக்கான தொகுப்பு உட்பட, சூறாவளி மீட்பு மற்றும் ஆதரவிற்காக ஏற்கனவே பத்து மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டுள்ளன‌ அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த பேரழிவின் பின்னணியில் சேதத்தின் அளவு, செலவு மற்றும் தேவைகள் பற்றி மதிப்பீடு செய்து கூடுதல் நிதி ஒதுக்கப்படும் பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் கூறினார்‌

முக்கியமான சாலை நெட்வொர்க்குகளை சரிசெய்வதற்காக தேசிய நிலப் போக்குவரத்து நிதியத்தின் அவசர வரவு செலவுத் திட்டத்தில் கூடுதலாக 250 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

வங்கிகள் மற்றும் பிற கடன் வழங்குநர்களுக்கு 10,000 வரை விரைவாக கடன் வழங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தேசிய அவசரகால நிலையை மேலும் ஏழு நாட்களுக்கு நீட்டிக்க அமைச்சர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

இந்த அவசரகால நிலை ஏழு பிராந்தியங்களுக்கு தொடர்ந்து பொருந்தும். அவை Northland, Auckland Tai Rāwhiti, Bay of Plenty, Waikato, Hawke's Bay மற்றும் Tararua என்று பிரதமர் ஹிப்கின்ஸ் கூறினார்.

பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு தலைமை அமைச்சர் நியமிக்கப்படுவார்.

நான் இன்றிரவு அந்த அமைச்சர்களின் பட்டியலை இறுதி செய்வேன், மேலும் அவர்களின் பிராந்தியங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யப் போகும் உள்ளூர் மீட்பு அணுகுமுறையில் ஒரு வாரத்திற்குள் சமூகங்களுடன் இணைந்து பணிபுரிந்து மீண்டும் அறிக்கை சமர்ப்பிக்க அவர்களைப் பணிப்பேன் என்று பிரதமர் ஹிப்கின்ஸ் கூறினார்.

சர் பிரையன் ரோச் தலைமையில் ஒரு புதிய சூறாவளி மீட்பு பணிக்குழு அமைக்கப்படும். மேலும் பணிக்குழுவிற்கான விதிமுறைகள் வரும் நாட்களில் அறிவிக்கப்படும்.

மீட்பு பணிகள் தொடர்பான முடிவுகளை எடுக்க கிராண்ட் ராபர்ட்சன் தலைமையில் புதிய அமைச்சரவைக் குழு அமைக்கப்படும், மற்றும் பார்பரா எட்மண்ட்ஸ் இணை அமைச்சராக நியமிக்கப்பட்ட உள்ளார் என பிரதமர் ஹிப்கின்ஸ் மேலும் தெரிவித்தார்.