Tauranga இற்கு அருகில் உள்ள Whakamārama என்ற இடத்தில் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று காலை 10.55 மணியளவில் இந்த விபத்து குறித்து தங்களுக்கு அறிவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாநில நெடுஞ்சாலை 2ல் Turner சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.