துப்பாக்கி மற்றும் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் Canterbury இல் இரண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி Timaru வின் தெற்கில் Pareora என்ற குடியிருப்புப் பகுதியில் 25 வயது இளைஞரைக் கண்டுபிடித்ததாக பொலிஸார் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.

தாக்குதல் ஆயுதம் மற்றும் போதைப்பொருள் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட அவர் Timaru மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என காவல்துறை தெரிவித்துள்ளது.

அதே இடத்தில், துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் தேடப்பட்டு வந்த 40 வயதுடைய ஒருவரைக் கண்டுபிடித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அங்கு 19.4 கிராம் கஞ்சாவும் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இது மேலும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படுவதற்கு வழிவகுக்கும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.