நெட்வொர்க் நிறுவனமான யூனிசன், Hawke's Bay இன் சில கிராமப்புற சமூகங்களில் மின்சார விநியோகத்தை மீட்டமைக்க பல மாதங்கள் ஆகும் என்று தெரிவித்துள்ளது.

Taradale வெளியே வெள்ளத்தால் சேதமடைந்த Redclyffe துணை மின்நிலையத்தில், தலைமை நிர்வாகி கென் சதர்லேண்ட்‌ கூறுகையில்..

யூனிசன் நிறுவனம் பிராந்தியத்தில் மின்சாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறினார்.

நாடு முழுவதும் உள்ள தொழில்துறையினரால் தங்களுக்கு நல்ல ஆதரவு கிடைத்ததாக சதர்லேண்ட் கூறினார்.

இது போலா சூறாவளியின் தாக்கத்தை விட பெரியது.

நாங்கள் பிற சூறாவளிகள் மற்றும் புயல்களை கடந்து வந்துள்ளோம், மூன்று வாரங்களுக்குள் எங்களால் மின்சார விநியோகத்தை மீட்டெடுக்க முடிந்தது. இது அதை விட அதிகமாக உள்ளது, எனவே மீட்டெடுக்க நீண்ட காலம்‌ ஆகும் என தெரிவித்தார்.

பாரிய அளவில் உள்கட்டமைப்பு பாதிக்கப்பட்டுள்ளதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று சதர்லேண்ட் கூறினார்.

நாங்கள் முடிந்தவரை விரைவாக மின்சாரத்தை திரும்பப் பெற முயற்சிக்கிறோம், அதைச் செய்வதற்கு மற்ற பிராந்தியங்களிலிருந்து ஆதரவைப் பெறுகிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.