கேப்ரியல் சூறாவளிக்குப் பிறகு காணாமல் போனவர்கள் பற்றிய 6000 புகார்களில் பாதி இப்போது தீர்க்கப்பட்டுவிட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று பிற்பகல் செய்தியாளர்களிடம் பேசிய கிழக்கு மாவட்ட கட்டளைத் தளபதி ஜீனெட் பார்க், சுமார் 3000 பேர் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் தெரிவித்தார்.

இதற்கிடையில் கேப்ரியல் புயலால் இறந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

ஒரு அறிக்கையில், வியாழன் அன்று Onekawa என்ற இடத்தில் ஒரு வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட நபர் கேப்ரியல் சூறாவளி தொடர்பான சூழ்நிலைகளில் இறந்ததாக நம்பப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனிடையே Crownthorpe இல் மற்றொரு மரணம் உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த நபரும் புயல் தொடர்பான சூழ்நிலையில் இறந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு மரணங்கள் தொடர்பிலும் விசாரணை மேற்கொள்ள மரண விசாரணை அதிகாரிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.